கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட முடக்கத்தால் புற்றுநோய் இருந்தது கண்டறியப்படாமல் ஒருவர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள மேற்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்தவர் ஷர்வின் ஹால் (27). இவரது மனைவி லாத்ரோயா ஹால். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சர்வின் கடந்த மார்ச் மாதத்தில், கால் வலியினால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனைக்கு பலமுறை சென்றும் அவருக்கு ஆன்டிபயாட்டிக் சிகிச்சையை மட்டும் அளித்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே சர்வின் மற்றும் அவரது மனைவி எம்ஆர்ஐ ஸ்கேன் […]
