சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக பரம்பிக்குளம் அணையில் மதகில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,மேற்கு தொடர்ச்சி மலையில் ஓடும் பரம்பிக்குளம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பரம்பிக்குளம் அணையின் செயல்பாடுகளையும், பராமரிப்பையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த அணையின் பிரதான மதகுகளில் ஒன்று உடைந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலந்து கொண்டிருப்பதாகவும், அணையின் முழு கொள்ளளவு வீணாகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளதாக வந்துள்ள […]
