தாண்டிக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புல்லாவெளி அருவிக்கு பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டியன் என்பவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு அவர் அருவியின் முகப்பில் நின்று புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது திடீரென நிலைத்தடுமாறிய அஜய் பாண்டியன் அருவியில் தவறி விழுந்தார். தற்போது அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். அந்த இளைஞர் தவறி விழும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் செல்ஃபி […]
