கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 5 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே கோவை மாவட்டம் பதற்றத்துடனே காணப்படுகிறது. அதாவது திமுக எம்.பி-ஐ பற்றி பேசிய உத்தம ராமசாமி கைது, பிஎஃப் அமைப்பை குறி வைத்து என்.ஐ.ஏ நடத்திய ரெய்டு, இந்து முன்னணி மற்றும் பாஜகவை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு போன்றவைகளால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதோடு இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினரின் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. […]
