மத்திய பிரதேசத்தில் பெருந்தொற்று நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினரை காவல்துறையினர் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பஞ்சாரி கிராமத்தில் உள்ள இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்காக மருத்துவ குழுவினர் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது பெருந்தொற்று நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவ குழுவினரை தாக்கி சிறைபிடித்துள்ளனர். தகவலறிந்து சென்ற போலீசார் மீதும் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் […]
