திருக்குறளின் 1,330 குறட்பாக்களை பரதநாட்டியம் வாயிலாகவும், இசை, கவிதை, உரைநடை, பாட்டு மூலமாகவும் 12 மணிநேரத்தில் வெளிப்படுத்தி உலக சாதனை முயற்சி மயிலாடுதுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவள்ளுவரின் உலகப்பொதுமறையான திருக்குறளின் பெருமையை கலைகளின் மூலம் உலகிற்கு தெரியப்படுத்தும் வகையில், பரதநாட்டிய உலக சாதனை நிகழ்ச்சியானது இன்று காலை தொடங்கியது. திருக்குறளின் 1,330 குறட்பாக்களையும், 21/2 வயது முதல் 42 வயது வரையிலான பரதநாட்டிய கலைஞர்கள் ஒவ்வொரு குறளின் பொருளையும், தமிழ் எழுத்துகள் பதித்த ஆடை மற்றும் ஆபரணங்கள் அணிந்த […]
