ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள குல்சன் சவுக் இடத்தில் அதிக போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 போலீசார் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த போது வழியில் உயிரிழந்தனர். […]
