உணவகங்களில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணையை பயோடீசல் ஆக மாற்றும் பணியை திருப்பூர் உணவு பாதுகாப்பு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாவட்டத்திலுள்ள உணவு பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணையை மீண்டும் சமையலுக்கு பயன்படுத்துவது கூடாது இதை மீறும் உணவகங்கள் மற்றும் மனிதர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் […]
