தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிப்பதற்காக வே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவதாக ஆளுநர் முன்பாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் தொடங்கியது. பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ரவி தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேசும்போது “இந்தியாவின் தலை சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார். கல்வியும் […]
