உளுந்தூர்பேட்டையில் சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து தனியார் பேருந்து மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து தனியார் பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழக அனைத்து தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பேருந்துகளை பயிற்சி பெரும் ஓட்டுநர் வைத்து இயக்குகின்றனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு பணிமனை எதிரே வைத்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து மற்றொரு பேருந்து […]
