வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கொ. வீரராகவ் புதன்கிழமை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதேபோல எஸ்.எஸ்.சி, ஆர்.ஆர்.பி, ஐ.பி.பி.எஸ், டி.ஆர்.பி, டி.என்.பி.எஸ்.சி டி.என்.யு.எஸ், ஆர்.பி போன்ற முகமைகளால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சியும் இங்கு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பயிற்சி வகுப்புகள் மூலமாக பயிற்சி பெற்று […]
