மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க பயிர்ப் பாதுகாப்புப் பணிக்காக 54 லட்சத்து 46 ஆயிரம் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ஹெக்டருக்கு 1,750 ரூபாய் வீதம், 3,112 ஹெக்டரில் பயிர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி பயிர்களில் மாவுப்பூச்சி […]
