பருவமழை காலத்தில் பயிர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்திலுள்ள வாழை, திராட்சை உள்ளிட்ட பழபெயர்கள் 18,750 ஹெக்டேர் அளவிலும் தக்காளி, மிளகாய், வெண்டைக்காய், வெங்காயம், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் 5700 ஹெக்டேர் அளவிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் வடக்கிழக்கு பருவமழை காலத்தில் பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரி கூறியுள்ளதாவது, வாழை பயிர்கள் காற்றுக்கு எளிதில் உடைந்துவிடும் […]
