தமிழகத்தில் சம்பா, தாளடி, பிசான பருவ நெல் பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சாகுபடி செய்த 24.13 லட்சம் ஏக்கர் நெல் பயிரில் 5.90 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். மேலும் கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், […]
