நெல் உள்ளிட்ட 14 வகையான பயிர்களின் கொள்முதல் விலையை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி 2022-23 ஆம் ஆண்டில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூபாய் 100 உயர்த்தப்பட்டு ரூ.2,040 ஆக அதிகரித்துள்ளது. மேலும் எள் குவிண்டாலுக்கு ரூ.523, பாசிப்பருப்பு குவிண்டாலுக்கு ரூ.480, சூரியகாந்தி விதை குவிண்டாலுக்கு ரூ.385 உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
