அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் ஒரு பயணி, விமான பணிப்பெண்ணின் முகத்தில் பலமாக குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், நியூயார்க் மாகாணத்தின் விமான நிலையத்திலிருந்து, கலிஃபோர்னியா மாகாணத்திற்கு புறப்பட்டுள்ளது. விமானம் புறப்படும் முன், அனைத்து பயணிகளும், முகக்கவசம் அணியுமாறு விமான ஊழியர்கள் அறிவித்தனர். அதன் பின்பு, விமானம் புறப்பட்டது. ஆனால், அதில் ஒரு நபர் மட்டும் முகக்கவசம் அணியவில்லை. எனவே, விமான பணிப்பெண் ஒருவர் சிரித்த முகத்தோடு பணிவாக அவரிடம் முகக்கவசம் அணியுங்கள் […]
