ரயில் நிலையத்திலிருந்து பெண் பயணியை ரயில்வே போலீஸ்சார் வெளியேற்றியதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரில் இருந்து நாங்குநேரிக்கு இரட்டை ரயில் பாதை ஆய்வு பணிக்காக தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபயகுமார் ராய் அங்கு வந்திருந்தார். இதனால் பகல் நேரங்களில் இயக்கப்பட்டு வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டது. இதை அறியாமல் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த ரேவதி என்ற பெண் திருப்பூர் செல்வதற்காக வந்திருந்தார். அப்போது ரயில்வே நிலைய அதிகாரிகளும் ஊழியர்களும் அந்த பெண்ணை ரயில் […]
