முக்கிய 7 எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் திடீர் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளதால் ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலம், ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சேலம் ஜங்சன் ரயில் நிலையம் – மேக்னசைட் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் பாதையிலுள்ள இரண்டு ரயில்வே பாலங்களில் கட்டுமான பராமரிப்பு பணி ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இதன்காரணமாக சேலம் வழியாக இயக்கப்படும் முக்கிய ரயில்களின் இயக்கத்தில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, […]
