சென்னையில் பேருந்தை நிறுத்துவதற்காக தமக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக பதட்டத்தை ஏற்படுத்தி இளம்பெண், அந்த பெண்ணை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று மேல்மருவத்தூர் கடந்து சென்றபோது , பேருந்தை நிறுத்துமாறு இளம்பெண் ஓட்டுநரிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. அதற்கு ஓட்டுநர் மறுப்பு தெரிவிக்க, தமது ரத்தப் பரிசோதனையில் வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் பேருந்தில் பயணித்த அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், ஓட்டுனர் உடனடியாக […]
