நாகப்பட்டினத்தில் லாரி மோதியதில் பயணிகள் நிழலக கட்டிடம் மோசமாக சேதமடைந்துள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கீழவாஞ்சூர் பகுதியில் தனியார் துறைமுகம் ஒன்றில் லாரிகள் நிலக்கரி ஏற்றி செல்வது வழக்கம். இந்நிலையில் திருவாரூரில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. இதில் டிரைவர் நிலைதடுமாறியதில் லாரி நாகூர் பகுதியில் உள்ள பயணிகள் நிழலக கட்டிடம் மீது வேகமாக மோதியது. இதையடுத்து லாரி டிரைவர் பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த […]
