தான்சானியாவிலிருந்து அங்கோலா நாட்டிற்கு வந்த பயணிகளுக்கு கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸால் அச்சம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் பரவிவரும் கொரோனா முதன்முதலில் சீனாவின் வூஹான் நகரில் தான் கண்டறியப்பட்டது. அதன் பின்பு பல நாடுகளில் பல்வேறு விதமாக உரு மாற்றம் அடையத் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து பிரிட்டன் வகை, தென்ஆப்பிரிக்க வகை, பிரேசில் வகை மற்றும் இந்திய வகை என்று பல்வேறு வைரஸ் வகைகள் பரவ தொடங்கிவிட்டது. இதில் சமீபத்தில் திடீர் உருமாற்றம் அடைந்த மூன்று வகைகள் […]
