உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான மோதல் நீண்ட காலமாக நிலவி வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிக சக்தி படைத்த கூடுதல் ஆயுதங்களை வழங்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ஜெலன்ஸ்கி போர் தொடங்கிய பின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன்பாக ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைனின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதற்காக […]
