பிரிட்டன் அரசு, கோவேக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு பயண கட்டுப்பாட்டை நீக்கியிருக்கிறது. உலக சுகாதார மையம் சமீபத்தில் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியது. அதன்பின்பு, கோவேக்சின் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் எடுத்துக் கொண்ட மக்களுக்கு, பல்வேறு நாடுகளும் பயண தடையை நீக்கியிருக்கிறது. இந்நிலையில், தற்போது பிரிட்டன் அரசு, இரண்டு தவணை கோவேக்சின் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்கள், தங்கள் நாட்டிற்கு வரலாம் எனவும் தனிமைப்படுத்துதல் போன்ற எந்த விதிமுறையும் இல்லை என்றும் […]
