பயங்கர விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அருகே தணக்கன்குளம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்த கார் வண்டி வாய்க்கால் பகுதிக்கு அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் குமார், சரக்கு வேன் ஓட்டுனர்கள் பாண்டியன் மற்றும் தண்டபாணி ஆகியோருக்கு பலத்த காயம் […]
