விமானம் தரையிறங்கிய போது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலால் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் நாட்டில் இருக்கும் ஏடன் என்ற விமான நிலையத்தில் பயங்கரமான வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஏமன் அரசாங்கத்தின் அமைச்சர்கள் வந்த விமானம் ஏடனில் தரையிறங்கியுள்ளது. அப்போது தரையிறங்கிய சிறிது நேரத்தில் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. […]
