ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினரும், காஷ்மீர் காவல்துறையினரும் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சித்ராநகரில் இருந்து கிளம்பிய லாரி காஷ்மீர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதையடுத்து ஜம்முவின் தவிநகர் பாலத்தில் இன்று காலை 7:30 மணி அளவில் வந்த லாரியை மறித்து பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின்போது லாரிக்குள் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென்று பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோட முயற்சி செய்தனர். அதன்பின் […]
