3 பேரை கொலை செய்ய பயங்கரமான ஆயுதங்களுடன் மறைந்திருந்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை, கொரட்டூர் அடுத்துள்ள மாதனாங்குப்பம் பஜனை கோவில் தெருவில் இருக்கின்ற ஒரு வீட்டில் பயங்கரமான ஆயுதங்களுடன் சிலர் மறைந்து இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவல் அறிந்த உடனே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் பச்சமுத்து தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குறிப்பிட்ட வீட்டுக்குள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதையடுத்து காவல்துறையினரை பார்த்ததும் ஒருவர் […]
