தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பில் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயக்கப்படும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் மையத்தை மானியத்தில் அமைப்பதற்கான புதிய திட்டம் செயல்படுத்துவதாக கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தமிழ் அரசின் வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் பழுது நீக்கும் மையத்தை இப்பொழுது மானியத்தில் […]
