ஆப்கானிஸ்தான் நாட்டில் டிக் டாக் மற்றும் பப்ஜி போன்ற செயலிகளுக்கு தடை விதிக்கப்படும் என்று தலீபான்கள் அறிவித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் கைப்பற்றிய தலிபான்கள், அங்கு பல கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். பல இணையதளங்களை அவர்கள் தடை செய்திருக்கிறார்கள், அதன்படி, அந்நாட்டில் சுமார் 23.4 மில்லியன் இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் வேறு பெயர்களில் அதே இணையதளங்கள் தொடங்கப்படுகிறது என்று ஆப்கானிஸ்தான் நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில், நாட்டில் […]
