வியாபாரி ஒருவர் வீடு கட்டுவதற்காகச் சிறுக சிறுக சேகரித்த ரூ.5 லட்சம் ரொக்கத்தை கரையான் அரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மயிலாவரம் பகுதியில் சிறுவர்கள் சிலர் சாலையில் கிழிந்த ரூ.200, 100, 50 நோட்டுக்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் போலீசுக்கு தகவல் தந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவர்களிடம் பிஜிலி ஜமாலைய்யா என்பவர் பணத்தை தந்தது தெரிய வந்தது அவரிடம் நடத்திய விசாரணையில், […]
