குழந்தையை பன்றி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் பகுதியில் ராஜா-மீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முகேன் (2) என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் குழந்தை வீட்டு வாசலின் முன்பாக தனியாக விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அங்கு சுற்றிக் கொண்டிருந்த ஒரு பன்றி குழந்தையின் கையில் கடித்துள்ளது. இதனால் குழந்தை வலி தாங்காமல் கதறி அழுதுள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
