கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் 1வது வார்டு கல்வி அவென்யூ குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஆட்டோ டிரைவர் பார்த்திபன். இவரது மகன் பிரவீன் (6) ஆவார். இதில் பிரவீன் நேற்று மதியம் தன் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சுற்றித் திரிந்த ஒரு பன்றி பிரவீனின் கழுத்து, தோள்பட்டை, முதுகு பகுதிகளில் கடித்துக்குதறியது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய அவனது சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பன்றியை […]
