சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அதற்கு பதிலடியாக நட்சத்திர விடுதி ஒன்றில் தமது ஆதரவுகளுடன் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அவரது ஆதரவு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜே சி டி பிரபாகரன், […]
