நெல்லை மாவட்டத்திலுள்ள முனைஞ்சிப்பட்டி அருகில் காரியாண்டி எனும் குக்கிராமத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி தாத்தா வயது(90). இவருடைய மனைவி வேலம்மாள் ஆவார். இதில் துரைப்பாண்டி தாத்தா தனது 12 வயதில் பனைமரம் ஏற கற்றுள்ளார். இதையடுத்து தாத்தா இளம் வயதில் அதையே முழுநேர தொழிலாக வைத்துள்ளார். அதன்பின் குடும்பத்துடன் மும்பையில் குடியேறிய துரைப்பாண்டி தாத்தா, அங்கேயும் பனைமரம் ஏறும் வேலைபார்த்து வந்துள்ளார். அதனை தொடர்ந்து பிள்ளைகளின் திருமண வாழ்க்கைக்கு பின் சொந்த ஊரான காரியாண்டியில் அவர் குடியேறி விட்டார். […]
