பெரம்பலூரில் மறைந்த நாம் கட்சி நிர்வாகிகளின் நினைவேந்தல் நிகழ்வில் சீமான் கலந்துகொண்டார். அப்போது பேசிய சீமான், “நான் படும் பாடு இருக்கிறதே! நாம் ஒன்று பேசினால், அவர்கள் வேறு ஒன்று எடுத்துப் பேசுகிறார்கள். நான் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஏன் மதம் மாற சொல்கிறேன் என்று கூறுகிறார்கள். எவ்வாறு தான் இவர்களுக்கு மனசாட்சியே இல்லாமல் இப்படி பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை. இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் தாய்மதம் திரும்ப வேண்டுமென்று நான் அழைத்தேனா? நான் மதத்தைப் பரப்புவதற்கு வந்த கால்டுவெல் […]
