ஆயுதபூஜை கொண்டாடப்பட்டு பனியன் தொழிற்சாலைகளில் இன்று சீரான முறையில் உற்பத்தியை தொடங்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பனியன்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வெளிநாடுகள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலைகளில் வருடந்தோறும் ஆயுதபூஜை கொண்டாடப்படுவது வழக்கம். இதனையடுத்து தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் தொழிற்சாலைகளில் இந்த ஆண்டு ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு சீராக பனியன் உற்பத்தி தொழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. […]
