சீனாவின் 5 தன்னாட்சி பிரதேசங்களில் திபெத் தன்னாட்சி பிரதேசமும் ஒன்றாகும். இங்கு திபெத் இனம் முக்கியமாக வாழ்கின்றது. இது சீனாவின் தென்மேற்கு பிரதேசத்திலும், சின்காய் திபெத் பீடபூமியின் தென்மேற்கு பிரதேசத்திலும் அமைந்துள்ளது. திபெத் தன்னாட்சி பிரதேசம் சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. மேலும் இது உலகத்தின் கூரை என்று போற்றப்படுகின்றது. திபெத்திலிருந்து பிரம்மபுத்திரா, கங்கை உள்ளிட்ட நதிகள் உற்பத்தியாகின்றன. இந்த நதிகளை நம்பி, சுமார் ஒன்றரை பில்லியன் மக்கள் ஆசிய கண்டத்தில் வாழ்ந்து […]
