பனங்காட்டுப் படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே இருக்கும் மஞ்சங்குளம் என்ற கிராமத்தை சேர்ந்த சாமிதுரை கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி நள்ளிரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய பனங்காட்டுப் படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜாவை காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் மும்பையிலிருந்து விமான மூலம் ராக்கெட் ராஜா திருவனந்தபுரம் வருவதாக […]
