ராமநாதபுரம் அருகே கிரிக்கெட் விளையாடிய போது, நெஞ்சில் பந்து விழுந்ததால் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் அருகே உள்ள வன்னிவயல் கிராமத்தை சேர்ந்தவர் பழனிக்குமார். இவரது மகன் சுபாஷ் குமார். அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். சுபாஷ் குமாருக்கு ஏற்கெனவே மூச்சுத்திணறல் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் நேற்று தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். […]
