பத்ரிநாத் கோவில் செல்லும் வழியில் கனமழை காரணமாக நெடுஞ்சாலை ஓரமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. உத்தரக்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோவில் மிகவும் பிரபலமான ஒன்று. தற்பொழுது கொரோனா போரால் மூடிக்கிடந்த அந்த கோவில் சென்ற மாதம் திறக்கப்பட்டு பக்தர்கள் வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென்று சாமோலியில் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு உத்தரக்கண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் கனமழை பெய்ததால் பூர்சாதி என்னுமிடத்தில் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓரிடத்தில் […]
