தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜெயசுதா. இவர் தற்போது அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஜெயசுதா, நடிகை ஜெயபிரதா ஆகியோர் நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது நடிகை ஜெயசுதா தென்னிந்திய சினிமாவில் பல திறமையான நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று கூறினார். […]
