கூகுள் நிறுவனத்தினுடைய CEO சுந்தர் பிச்சைக்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்திய நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த வருடத்திற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு முன்பே வழங்கப்பட்டு விட்டன. ஆனால், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய நாட்டின் சார்பாக அமெரிக்க நாட்டிற்கான இந்திய தூதராக இருக்கும் தரன்ஜித் சிங் சந்து சுந்தர் […]
