வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியாகிய மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்துவருகிறார். இதில் பத்துதல திரைப்படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கியிருக்கும் ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் […]
