பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பத்திரிக்கையாளர்கள் சங்கம் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. மெக்சிகோ நாட்டில் உள்ள டிஜுனா நகரத்தில் மூத்த பத்திரிகையாளரான லூர்து மால்டோநாட் வசித்து வந்தார். இவர் காரில் சென்ற கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அந்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளரான லூர்து மால்டோநாட் 3 வருடங்களுக்கு முன்பாகவே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மெக்சிகோ அதிபருக்கு புகார் […]
