மத்திய அரசு 25 லட்சம் ரூபாய் லாட்டரி பரிசு வழங்குவதாக பரவி வரும் தகவல் குறித்து எச்சரித்துள்ளது. ஜியோ நிறுவனமும், கோன் பனேகா குரோர்பதி என்ற நிறுவனமும் இணைந்து பரிசுப்போட்டி நடத்துவதாகவும், இதில் வெற்றி பெறுபவருக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு கிடைக்கும் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இது மோசடி கும்பல்களால் பரப்பப்படும் செய்தி என தற்போது மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் பத்திரிகை தகவல் […]
