பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என மொத்தம் […]
