கேரளா மாநிலத்தில் சட்டத்திற்கு புறம்பான முறையில் மருத்துவ ஆக்சிஜனை பதுக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் எச்சரித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்து வருகின்றது. ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைப்பது அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இது காரணமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் கேரள தலைமைச்செயலாளர் ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்து அதற்கு பற்றாக்குறை ஏற்படும்போது கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை […]
