வேலூர் பில்டர் பெட் சாலையிலுள்ள வீட்டில் வெளி மாநிலங்களுக்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகளில் பதுக்கி வைத்து இருப்பதாக குடிமைப்பொருள் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்படி வேலூர் குடிமைப் பொருள் தனி தாசில்தார் சத்தியமூர்த்தி தலைமையில் வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் குழுவினர் அப்பகுதிக்கு சென்று வீடு, வீடாக சோதனை செய்தனர். அப்போது கலாஸ் நிமந்தக்கார தெருவிலுள்ள பாழடைந்த வீட்டினுள் பெரும்பாலான பிளாஸ்டிக் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த குடிமைப்பொருள் குழுவினர் வீட்டிற்குள் சென்று […]
