தெலுங்கானாவில் உள்ள பெண்களால் பதுகம்மா எனப்படும் மலர் திருவிழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. இது தெலுங்கானாவில் மகாளய அமாவாசை நாளில் தொடங்கி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் வீட்டையும் தங்களையும் விதவிதமான மலர்களால் அலங்கரித்து தெலுங்கானா பெண்கள் கடவுளை வழிபடுவார்கள். இதில் பதுகம்மா என்பதன் பொருள் “அம்மனே வருக” என்பதாகும். இவ்விழாவில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் கொண்ட மலர்களால் ஏழு அடுக்குகளாக கோபுரம் அமைக்கப்படுகிறது. பின்னர் கலசத்தை தட்டின் நடுவில் வைத்து அதைச் சுற்றி வண்ணமயமான […]
