மருத்துவமனையின் அலட்சியத்தால் தனது மகன் உயிரிழந்ததாகக் கூறி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு உத்திரப்பிரதேச மாநிலம் பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் அகர்வால் போராடி வருகிறார். உத்திரபிரதேசத்தை சேர்ந்த சண்டிலா தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் அகர்வால் என்பவரின் மகன் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் கூறுகையில்: “எனது மகன் 26-ஆம் தேதி காலையில் நன்றாக […]
